பிரபல நடிகருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இரண்டு நடிகைகள் கைது!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில மாதங்களாக 'மீடூ'வின் மூலம் கூறி வருவதால் பல விஐபிக்களின் முகத்திரை கிழிந்து வருகிறது. மீடு மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சனைகளை தைரியமாக வெளியே தெரிவித்த நடிகைகளுக்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் இன்னொருபுறம் ஒருசிலர் இந்த 'மீடூ'வை தவறான செயலுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல மராத்தி நடிகர் சுபாஷ் யாதவ் என்பவரை அவருடன் நடித்த நடிகை ரோஹினி என்பவரும் அவருடன் இணைந்து ஷாரா சரவான் என்ற நடிகையும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பவிருப்பதாக மிரட்டியுள்ளனர். இதனை செய்யாமல் இருக்க தங்களுக்கு ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளதால் வேறு வழியின்றி இருவருக்கும் ரூ.1 லட்சம் மட்டும் சுபாஷ் யாதவ் கொடுத்ததாக தெரிகிறது. இந்த செயலுக்கு சில போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்,.

இந்த நிலையில் அந்த இரு நடிகைகளும் மீண்டும் சுபாஷிடம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய நடிகைகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.