14 ஓவர் முடிந்ததும் கதறியழுத இளம்பெண், வெற்றி பெற்றதும் துள்ளி குதித்த காட்சி: வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் 14 ஓவர் முடிவில் சென்னை அணி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது பலருக்கு சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை. குறிப்பாக 14.4 ஓவர்கள் முடிந்ததும் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் என்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. ஆனால் அதை சாத்தியமாக்கி ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இந்த நிலையில் 14 ஓவர் முடிந்ததும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து விடும் என்ற எண்ணத்தில் மைதானத்தில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 14.4 ஓவர் வரை அவர் அழுது கொண்டிருந்த நிலையில் அதனை அடுத்து ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வென்றவுடன் அதே பெண் மகிழ்ச்சியில், ஆனந்த கண்ணீரில் துள்ளிக்குதித்த காட்சியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரை இதை ஒரு போட்டியாக பார்க்காமல் ஒரு எமோஷனல் நிகழ்வாகத்தான் பார்த்து வருகின்றனர். அந்த இளம்பெண் மட்டுமின்றி பெரும்பாலான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதும் ஆனந்த கூத்தாடி வெற்றியை கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
CSK won it for her😅
— Tanmai Shukla (@garam_mizaaj) May 29, 2023
Congratulations CSK.@ChennaiIPL #IPL2023Finals #IPL2023Final #SuccessionFinale #MSDhoni #ChennaiSuperKings #GTvsCSK #GTvCSK pic.twitter.com/Py6iiilKRd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments