2 வருடத்திற்கு பிறகு முதல் விக்கெட்… உணர்ச்சியில் அழத் தொடங்கிய வீரரின் வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருக்கும் குல்தீப் யாதவ் சிறந்த ஸ்பின் பவுலராக அறியப்படுகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெற்ற இவர் அப்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருவார் என்ற கணிப்புகளும் எழுந்தன.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக குல்தீப் யாதவிற்கு பெரிதாக வாய்ப்புகளே கொடுக்கப் படாமல் ஒதுக்கப்பட்டார். அமீரகத்தில் நடைபெற்ற ஐபில் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரிலும் குல்தீப்புக்கு வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. இதனால் பெஞ்சில் அமர வேண்டிய நிலையே தொடர்ந்தது. இவரைப் பார்த்து ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்களே வருத்தம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குல்தீப் இடம் பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்து வந்தது. ஆனால் அந்தப் போட்டியிலும் குல்தீப் பெயர் இடம்பெற வில்லை. இதனால் முன்னாள் வீரர் கவாஸ்கர், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். இங்கிலாந்து வீரர்களின் ரன்களை குறைக்க இவரின் விரிஸ்ட் ஸ்பின் பவுலிங் உதவும் எனவும் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அதிக ரன்களை எடுத்ததால் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார் கேப்டன் விராட் கோலி. அதிலும் குறிப்பாக நதீமுக்குப் பதிலாக குல்தீப் யாதவை களம் இறக்கினார்.
இதனால் குல்தீப் மீண்டும் ஃபார்மிற்கு வருவார் எனப் பலரும் கூறி வந்தனர். ஆனால் முதல் இன்னிங்ஸில் வெறும் 6 ஓவர்களே கிடைக்கப் பெற்ற குல்தீப் அதில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் 45 ஓவர்கள் கழித்து குல்தீப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் இத்தனை ஏமாற்றங்களையும் சுமந்து கொண்டு களம் இறங்கிய குல்தீப் இங்கிலாந்து வீரர் ரூட்டை அவுட்டாக்க கடும் முயற்சி செய்தார். ஆனால் சிராஜ் கேட்சை தவற விட்டதால் அதுவும் பறிபோனது.
இதனால் சிறிதும் மனம் தளராத குல்தீப் அடுத்து தன்னுடைய அபராமான பந்து வீச்சினால் இங்கிலாந்து வீரர் போக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் குல்தீப் 2 வருடங்கள் கழித்து தன்னுடைய முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். அந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி வயப்பட்டு குல்தீப் அழுதக் காட்சியையும் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு ஃபார்மிற்கு வந்ததைக் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout