சீன பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் இந்தியர்கள்: யாருக்கு நஷ்டம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் சீனா எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சீனா திட்டமிட்டு இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்களை தாக்கி உயிர் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், டிக்டாக் உள்ளிட்ட எந்த சீன செயலிகளை இனி பயன்படுத்தக் கூடாது என்றும், சீனாவில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யக்கூடாது என்றும் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிவி ஒன்றை மாடியில் இருந்து தூக்கி எறிந்து உடைப்பதும், அதை அங்கிருந்த பலர் காலால் மிதித்து அடித்து நொறுக்குவதுமான காட்சி உள்ளது.
இதுகுறித்து டிவிட்டர் பயனாளிகள் கூறும் போது ’சீன பொருள்களை இனிமேல் வாங்கக்கூடாது என்று சபதம் எடுக்கலாம். ஆனால் ஏற்கனவே வாங்கிய பொருட்களை உடைப்பதால் சீனாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பொருளை வாங்கியவர்களுக்குத்தான் நஷ்டம். எனவே இது மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.
அவர் கூறியதுபோல் ஏற்கனவே சீனப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கிய நிலையில் அந்த பொருட்களை உடைப்பதால் பொருளுக்கு உரியவர் தான் நஷ்டம் அடைவர். எனவே இனிமேல் சீனாவின் பொருட்களை வாங்காமல் இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று உறுதி எடுத்தாலே போதும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout