ரஜினியின் வீடியோவை டுவிட்டர் நீக்கியது ஏன்? பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Sunday,March 22 2020]
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கவும் பிரதமர் மோடி அறிவித்திருந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிக்க கோரியும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளதாகவும், அது மூன்றாவது ஸ்டேஜிற்கு போய்விடக்கூடாது என்றும் கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்தாலே அது மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் இருப்பதை நாம் தடுக்கலாம் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்த வீடியோ தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி டிவிட்டர் இந்தியா அதிரடியாக நீக்கியுள்ளது இந்த வீடியோவில் கொரோனா வைரஸ் 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் மூன்றாவது நிலையை தவிர்க்கலாம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்த கருத்து தவறு என பலர் டுவிட்டரில் புகார் அளித்ததை அடுத்து டுவிட்டர் இந்தியா அதிரடியாக இந்த வீடியோவை நீக்கி உள்ளதாக தெரிகிறது.
இந்த டுவிட்டை நீக்கியது குறித்து ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், கொரோனா குறித்த ஆய்வாளர்கள் ரஜினி கூறியது தவறு என்றும், டுவிட்டர் இந்தியா எடுத்த நடவடிக்கை சரி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.