'தலைவா' என அழைத்து ரஜினிக்கு நன்றி கூறிய 'டுவிட்டர் இந்தியா'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன் தினம் பதிவு செய்த கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு ஏகப்பட்ட புகார் வந்ததால், டுவிட்டர் இந்தியா அந்த வீடியோவை அதிரடியாக நீக்கியது. ஆனால் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்ததோடு தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு புகார் செய்யப்பட்டதால் டுவிட்டர் இந்தியா அந்த வீடியோவை நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த விளக்கத்திற்கு டுவிட்டர் இந்தியா நன்றி தெரிவித்ததுடன் ரஜினியை அனைவரும் அழைப்பது போல ‘தலைவா’ என்று அழைத்துள்ளது. இதுகுறித்து டுவிட்டர் இந்தியா கூறியிருப்பதாவது: COVID-19 குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா என்று தெரிவித்துள்ளது

டுவிட்டர் இந்தியாவின் இந்த டுவிட்டுக்கு ரஜினி ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பதும், ரஜினியின் வீடியோ குறித்து கேலி, கிண்டல் செய்த நெட்டிசன்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இந்த மாதிரி ஆளுங்களை வச்சுகிட்டு கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக எளிதாக பரவும்

சென்னை உள்பட 3 மாவட்டங்கள் முடக்கப்படுகிறதா? முதல்வர் அவசர ஆலோசனை!

கொரோனா வைரஸை தடுக்க நேற்று நடைபெற்ற மக்கள் சுய ஊரடங்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்த,

வெளிமாநில பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்: தமிழக அரசின் அடுத்த அதிரடி

கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை காக்க தமிழக அரசு அவ்வப்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து

பிரபல இயக்குனர் விசு காலமானார்!

பிரபல தமிழ் இயக்குனர் விசு உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74

மொத்த நாடும் ஒரே நேரத்தில் கைதட்டியது: கொரோனாவை விரட்ட இந்த ஒற்றுமை போதும்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை தன்னலம் கருதாது காப்பாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு