ரஜினிக்கு டுவிட்டர் வழங்கிய சிறப்பு அந்தஸ்து
Monday, March 21, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக இணையதளங்களில் ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடுத்த இடத்தில் உள்ள டுவிட்டர் ஆரம்பமாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 10வது ஆண்டு நிறைவு நாளை ஒட்டி கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து டுவிட்டர் அறிவித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் 'டுவிட்டர் இந்தியா' கண்ட முக்கிய பத்து ஸ்டேட்டஸ்களில் ஒன்றாக ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்ததையும் அவருடைய முதல் டுவீட்டையும் குறிப்பிட்டு அவருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ளது.
டுவிட்டர் இந்தியாவின் மற்ற முக்கிய ஸ்டேட்டஸ்கள் பின்வருமாறு: மும்பை தாக்குதல், நரேந்திர மோடியின் லோக்சபா தேர்தல் வெற்றி, இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பை வென்றது, டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்காரம், சென்னை வெள்ளம், சச்சின் தெண்டுல்கர் ஓய்வு, செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான், தாஜ்மஹால் டுவிட்டரில் இணைந்தது ஆகியவற்றை ஞாபகப்படுத்தியுள்ள டுவிட்டர் இணையதளம், ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.
Here's a look at the Top 10 India Milestones on Twitter through some of the best Tweets! #LoveTwitter pic.twitter.com/cq7e0XqmZS
— Twitter India (@TwitterIndia) March 21, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments