close
Choose your channels

'மாஸ்டர்' படத்தை லீக் செய்தவரை கண்டுபிடிக்க உதவியது இதுதான்!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ் திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென ஒருசில இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் லீக்கானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இது குறித்து படக்குழுவினர் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருந்தனர் என்பதும் தனியார் டிஜிட்டல் நிறுவன ஊழியர் ஒருவர் தான் இந்த காட்சிகளை லீக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அந்த ஊழியர் மீது காவல்துறையில் தயாரிப்பாளர் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனியார் டிஜிட்டல் நிறுவன ஊழியர் தான் இந்த காட்சிகளை லீக் செய்தது என்பதை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் மிகப் பெரிய அளவில் உதவி செய்ததாகவும் அதன் காரணமாகவே லீக் செய்தது யார் என்பது எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் ’மாஸ்டர்’ லீக் காட்சிகள் மேலும் பரவாத வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட லீக் காட்சிகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன என்றும், இதற்கு விஜய் ரசிகர்கள் உள்பட டிவிட்டர் பயனாளிகள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment