மிஸ் யுனிவர்ஸ் பெயரில் போலி கணக்கு: வெரிஃபைடு கொடுத்த டுவிட்டரால் பரபரப்பு!
- IndiaGlitz, [Friday,December 17 2021]
20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அழகி ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில் அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைட் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மிதா சென், லாரா தத்தா ஆகியோர்களை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் ஹர்னாஸ் சந்து என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஹர்னாஸ் சந்து வென்ற தகவல் வெளியானதும் அவரது பெயரில் ஏராளமான போலி சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கப்பட்டன என்பதும் இதில் ஒரு கணக்கு டுவிட்டரில் வெரிஃபைடு பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி டுவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைட் அளித்துள்ளதை அடுத்து ஹர்னாஸ் சந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உண்மையான டுவிட்டர் கணக்கில் ஐடியை பதிவு செய்து இதுதான் தனது உண்மையான ட்விட்டர் பக்கம் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.