தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் புளூடிக்: ஒருசில மணி நேரங்களில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த புளூடிக் திடீரென நீக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் கொந்தளித்து இருந்ததால் சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் நிர்வாகம் அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு புளூடிக் கொடுத்துள்ளது.
பிரபலங்களுக்கு வெரிஃபைட் என்ற புளூடிக்கை டுவிட்டர் நிர்வாகம் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பாக உயர் பதவியில் உள்ளவர்களுக்கு, சினிமா துறையினருக்கு, விளையாட்டுத் துறையினருக்கு இந்த புளூடிக் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புளூடிக் வழங்கப்பட்டால் பிரபலங்களின் பெயரில் உள்ள போலி கணக்குகளை அடையாளம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனியின் புளூடிக் இன்று திடீரென நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தோனியின் ரசிகர்கள் கொந்தளித்து டுவிட்டர் நிர்வாகத்துக்கு எதிராக ட்விட்டர் பக்கத்திலேயே கருத்துக்களை தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து டுவிட்டர் நிர்வாகம் மீண்டும் தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் புளூடிக் வழங்கியுள்ளது. பொதுவாக புளூடிக் வழங்கப்பட்டவர்கள் தங்களுடைய பக்கத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது டுவிட்டர் விதிகளில் ஒன்றாகும். ஆனால் தோனியின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் எந்தவித டுவிட்டரும் பதிவு செய்யாததை அடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்த புளூடிக் நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ரசிகர்களின் கொந்தளிப்பு காரணமாக மீண்டும் புளூடிக் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout