5 ஆண்டுகள் கழித்து ஷரபோவாவிடம் மன்னிப்பு கோரும் இந்திய டுவிட்டர் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

ஐந்து ஆண்டுகள் கழித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவிடம் இந்திய டுவிட்டர் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹானா உள்பட பல வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்தனர். ஆனால் சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் ரிஹானாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட் செய்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா, ‘ சச்சின் டெண்டுல்கர் யாரென்றே எனக்கு தெரியாது’ என தெரிவித்து இருந்தார். அப்போது லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் அவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது சச்சின் யார் என்பதை நாங்கள் சரியாக புரிந்துகொண்டு விட்டோம் என்றும் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஷரபோவா அவரை புரிந்து வைத்திருக்கிறார் என்றும் எனவே அவர் கூறியது சரிதான் என்றும் அதனால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டிவிட்டர் ரசிகர்கள் தற்போது பதிவு செய்து வருகின்றனர். நீங்கள் சச்சினைப் பற்றி சரியாகத் தான் கூறியிருக்கிறீர்கள் என்றும், அவர் தரமான மனிதர் இல்லை என்று உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்று ஒரு டுவிட்டர் பயனாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென தன்னிடம் மன்னிப்பு கேட்கும் இந்திய ரசிகர்கள் குறித்து மரிய ஷரபோவா தனது டுவிட்டரில் ’யாருக்காவது ஆண்டுகள் பற்றிப் ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா? என்று கேட்டுள்ளார்

கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்திய மக்களால் போற்றப்பட்டு பல ஆண்டுகளாக நன்மதிப்பை பெற்று இருந்த சச்சின் டெண்டுல்கர், ஒரே ஒரு டுவிட்டால் தனது மதிப்பை இழந்து விட்டதாக பல நெட்டிசன்கள் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் 2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

அஸ்வின் மீது காதலா? 'குக் வித் கோமாளி' சுனிதாவின் வைரல் வீடியோ!

ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்று விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவர் சுனிதா. இவரும் ஷிவாங்கியும் மாறி மாறி அஸ்வினை காதலிப்பது

ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கிய காஜல் அகர்வால் கணவரின் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் பதிவு செய்த ஒரு புகைப்படம் ரசிகர்களை குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது

விவசாயிகள் போராட்டம் குறித்து வெற்றிமாறன் கூறிய 'நச்' கருத்து!

மத்திய அரசு பிறப்பித்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி… விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்!

கடந்த சில தினங்களாகத் தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.