டிவிட்டர் நிறுவனத்தின் CEO-ஆன இந்தியர்… யார் இந்த பராக் அகர்வால்?

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பராக் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகக் கருதப்படுகிறது.

இதுவரை டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி நேற்று திடீரென பதவி விலகினார். இதையடுத்து அந்நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப தலைவராக (CTO) பணியாற்றி வந்த பராக் அகர்வால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐஐடி நிறுவனத்தில் பயின்று பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டியை முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட், யாஹு  போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஜாக் டோர்சி, டிவிட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்ப விஷயங்களைக் கவனித்து வந்த பராக் அகர்வால் பல இக்கட்டான சூழல்களில் நிறுவனத்தை வழிநடத்தியவர் என்றும் தொழில்நுட்ப வகையில் எளிமையான சேவையைக் கொடுப்பதற்கு உதவியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

இந்தியாவில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் வகை

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்கள்: யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்பது அதேபோல் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.

எனக்கு பிரியங்கா ப்ரெண்டே கிடையாது: பிரேக்கிங் நியூஸ் தந்த தாமரை!

எனக்கு பிரியங்கா ப்ரெண்டே கிடையாது என தாமரை பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அட்டகாசமான தகவல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய அவதாரம்

மனைவியுடன் பாக்சிங் செய்யும் வில்லன் நடிகர்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “சார்பாட்டா பரம்பரை“. இந்தப்