டுவிட்டர் சி.இ.ஓவுக்கே இந்த நிலைமையா? ஹேக்கர்கள் கொடுத்த அதிர்ச்சி
- IndiaGlitz, [Saturday,August 31 2019]
அரசியல்வாதிகள், பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் டுவிட்டர் கணக்குகளை அவ்வப்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து அதிர்ச்சி தருவது வழக்கமான ஒன்றே. இதனால் டுவிட்டர் நிர்வாகம் தற்போது அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் ஹேக்கர்களின் கைவரிசை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் டுவிட்டர் தளத்தின் சி.இ.ஓ மடியிலேயே ஹேக்கர்கள் கைவைத்துவிட்டனர். ஆம், டுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
டுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சியின் கணக்கு முடக்கப்பட்டதை டுவிட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்டது. இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகள் தங்கள் டுவிட்டர் கணக்கின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள டுவிட்டர் நிர்வாகம், எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளது.
டுவிட்டரில் உள்ள மற்றவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டால் டுவிட்டர் தலைமைக்கு புகார் அளிப்பது வழக்கம். ஆனால் டுவிட்டர் சி.இ.ஓ கணக்கையே முடக்கப்பட்டுள்ளதால் டுவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.