டிவிட்டருக்கு மாற்றாக அறிமுகமான 'த்ரெட்ஸ்'… புதிய அம்சங்கள் என்னென்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்துவரும் டிவிட்டர் சமீபகாலகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில் அதற்கு மாற்றாக தற்போது Treads செயலி அறிமுகமாகி இருக்கிறது. பார்ப்பதற்கு டிவிட்டர் போன்றே இருக்கும் இந்த செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பிரபலமான சோஷியல் மீடியாவாக இருந்துவரும் டிவிட்டரை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கடந்த நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கிய நிலையில் தற்போது ப்ளு டிக்கிற்கு சந்தாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதைத் தவிர எடிட்டிங் மெசேஸ் வசதியை கொண்டு வந்திருக்கும் அவர் தொடர்ந்து டிவிட்டர் பதிவை பார்ப்பதற்கே கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். மேலும் டேஷ்போர்ட் பயன்பாட்டிற்கு உதவும் Tweetdeck கிற்கும் சந்தா தொகை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டுவரும் நிலையில் அதன் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உரையாடல் பரிமாற்றத்திற்கான Treads எனும் புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்தச் செயலியை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் எனும் 3 நிறுவனங்களின் ஒருங்கிணைப்பான மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 11 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
த்ரெஸ்ட் செயலியானது மெட்டா நிறுவனத்தில் உருவாக்கி இருப்பதால் இன்ஸ்டாகிரம் வாயிலாக லாகிங் செய்துகொள்ள முடியும். இன்ஸ்டாகிராமின் இணைப்பாகவே இது காணப்படுகிறது. இதனால் இன்ஸ்டா கணக்கில் இருக்கும் டேட்டாக்களை அப்படியே த்ரெட்ஸ் செயலிக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று பயன்பாட்டிற்கு வந்த 4 மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோயர்கள் இதற்கு கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உரையாடல் செயல்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் த்ரெட்ஸ் செயலியில் 500 எழுத்துகளை பதிவிட முடியும். மேலும் அதற்குமேல் எழுத்துகளை பதிவிட வேண்டும் என்றதால் இன்ஸ்டாகிராம் போன்று அடுத்தடுத்த பதிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உரையாடலைத் தவிர ஒரே நேரத்தில் 10 புகைப்படங்களை இணைத்து இதில் அனுப்ப முடியும். 5 நிமிட வீடியோக்களையும் இணைத்து அனுப்பும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் செயலி என்பதால் செல்போனின் தரவுகள் ப்ரவுசிங் ஹிஸ்டரி போன்றவற்றை இது பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் சந்தாதரர்கள் நேரடியாக ஆப் ஸ்டோரில் இருந்து த்ரெட்ஸ் செயலியை டவுன்லோட் செய்து பின்னர் இன்ஸ்டா கணக்கு விவரங்கள் மூலமாக லாக்-இன் செய்துகொள்ளலாம். இதனால் இன்ஸ்டாவில் இருக்கும் விவரங்கள் த்ரெட்ஸ் செயலிக்கு வந்துவிடும்.
டிவிட்டருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத்‘ எனும் சோஷியல் மீடியாவை ஆரம்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர மஸ்டாடோன் எனும் செயலியும் டிவிட்டருக்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது த்ரெட்ஸ் செயலியை ஏற்கனவே பிரபலமாக இருந்துவரும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருப்பதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout