சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த இரட்டையர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இரட்டை குழந்தைகளான இலன் மற்றும் இயல் இணைந்துள்ளனர். இவர்கள் காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்த அர்ஜூனனின் இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ருவாகி வரும் இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout