ஒரே நபருடன் உறவு.. ஒரே நேரத்தில் கர்ப்பமாக விரும்பும் இரட்டை சகோதரிகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டையர்களான இரு இளம் பெண்கள் ஒரே நபருடன் உறவு கொண்டு ஒரே நேரத்தில் கர்ப்பமாக விரும்புவதாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டையர்கள் என்பது பெரும்பாலும் உருவத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் குணத்தில் சில மாறுபாடு இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்த அன்னா மற்றும் லூசி ஆகிய இரட்டை சகோதரிகள் சிறு வயதில் இருந்து ஒரே மாதிரியாக உருவத்தில் மட்டுமின்றி குணத்திலும் உள்ளனர்
இருவரின் தோற்றங்களில் சில மாற்றங்கள் இருந்தாலும் அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருவரும் ஒரே மாதிரியாக மாறி உள்ளனர் என்பதும் அடையாளம் தெரியாதவாறு இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். கழிப்பறை சென்றாலும் குளிக்க சென்றாலும் சாப்பிட சென்றாலும் இருவரும் ஒரே நேரத்தில் தான் செல்வார்களாம். எப்போதுமே இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிவதால் இருவருக்குள் இருக்கும் வித்தியாசத்தை நெருங்கிய உறவினர்களே கண்டுபிடிப்பது கடினமாக இருக்குமாம்.
இந்த நிலையில் இருவரும் பென் என்ற ஒரே நபரை காதலித்து வருவதாகவும், தற்போது அவர் மூலம் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகவும் ஆசைப்படுகின்றனர் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர். இருவரும் ஒரே நபரை திருமணம் செய்து ஒரே நேரத்தில் உறவு கொண்டு ஒரே நேரத்தில் கருத்தரிக்கவும் விரும்புவதாக பேட்டி அளித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் செயற்கை கருத்தரித்தல் முறையினை தேர்வு செய்துள்ளதாகவும் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் அந்த பேட்டியில் கூறியுள்ளனர். இந்த இரட்டை சகோதரிகளின் பேட்டி வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments