வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்றேன்: அக்சயகுமாரை மிரட்டிய மனைவி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர், நடிகைகளின் பார்வை தற்போது டிஜிட்டல் மார்க்கெட் பக்கம் போய் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் மீடியாவிற்காக திரைப்படம் தயாரிக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் அவர்கள் 'தி எண்ட்' என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றபோது அக்சயகுமார் தனது உடையில் நெருப்பை பற்ற வைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்தார். இதுகுறித்து அவர் தனது மனைவி டுவிங்கிள் கண்ணாவிடம் கூட கூறவில்லை என தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பார்த்த டுவிங்கிள் கண்ணா, 'நீங்கள் திடீரென தீ வைத்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்கிறேன் என்று செல்லமாக மிரட்டியுள்ளார். டுவிங்கிள் கண்ணாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
Crap! This is how I find out that you decided to set yourself on fire ! Come home and I am going to kill you-in case you do survive this! #GodHelpMe https://t.co/K7a7IbdvRN
— Twinkle Khanna (@mrsfunnybones) March 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments