'தியான போட்டோகிராபி': மோடியின் தியானத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பத்ரிநாத், கேதாரிநாத் சென்று சாமி தரிசனம் செய்து அங்குள்ள ஒரு குகையில் விடிய விடிய தியானம் செய்தார். பிரதமர் மோடி தியானம் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
பிரதமரின் இந்த தியானத்தை பாஜகவினர் உயர்வாகவும், எதிர்க்கட்சிகள் கிண்டலாகவும் விமர்சனம் செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக மோடியின் தியானம் தான் அகில இந்திய அளவில் டிரெண்டாக இருந்தது.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் அக்சயகுமாரின் மனைவியும், ராஜேஷ் கண்ணா - டிம்பிள் கபாடியா நட்சத்திர ஜோடியின் மகளுமான டுவிங்கிள் கண்ணா தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியின் தியானத்தை கிண்டல் செய்யும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக ஆன்மீக புகைப்படங்கள் வைரலாகி வருவதை பார்த்தபின்னர் இதற்காக ஒரு பயிற்சி நிலையம் அமைக்கலாம் என்ற யோசனை எனக்கு வந்துள்ளது. பயிற்சி மையத்தின் பெயர் 'தியான போட்டோகிராபி. திருமண போட்டோகிராபி போல் இந்த தியான போட்டோகிராபியும் எதிர்காலத்தில் ஃபேமஸ் ஆகும் என நினைக்கின்றேன்' என்று பதிவு செய்து இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.
Folks please sign up-After seeing so many spiritual images in the last few days-I am now starting a series of workshops ‘Meditation Photography-Poses and Angles’ I have a feeling after wedding photography this is going to be the next big thing :) #AJokeADayMayKeepJillSane pic.twitter.com/uYP4FpQvYX
— Twinkle Khanna (@mrsfunnybones) May 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments