'தியான போட்டோகிராபி': மோடியின் தியானத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை!

கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பத்ரிநாத், கேதாரிநாத் சென்று சாமி தரிசனம் செய்து அங்குள்ள ஒரு குகையில் விடிய விடிய தியானம் செய்தார். பிரதமர் மோடி தியானம் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

பிரதமரின் இந்த தியானத்தை பாஜகவினர் உயர்வாகவும், எதிர்க்கட்சிகள் கிண்டலாகவும் விமர்சனம் செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக மோடியின் தியானம் தான் அகில இந்திய அளவில் டிரெண்டாக இருந்தது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் அக்சயகுமாரின் மனைவியும், ராஜேஷ் கண்ணா - டிம்பிள் கபாடியா நட்சத்திர ஜோடியின் மகளுமான டுவிங்கிள் கண்ணா தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியின் தியானத்தை கிண்டல் செய்யும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக ஆன்மீக புகைப்படங்கள் வைரலாகி வருவதை பார்த்தபின்னர் இதற்காக ஒரு பயிற்சி நிலையம் அமைக்கலாம் என்ற யோசனை எனக்கு வந்துள்ளது. பயிற்சி மையத்தின் பெயர் 'தியான போட்டோகிராபி. திருமண போட்டோகிராபி போல் இந்த தியான போட்டோகிராபியும் எதிர்காலத்தில் ஃபேமஸ் ஆகும் என நினைக்கின்றேன்' என்று பதிவு செய்து இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

More News

'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் மிஸ் ஆன 'தல' & 'தல!

தனியார் அமைப்பு ஒன்று நடத்திய 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் தல அஜித் மற்றும் தல தோனி ஆகிய இருவரது பெயர்களும் மிஸ் ஆகியுள்ளது

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிப்பட இயக்குனர்?

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா

'அவெஞ்சர்ஸ்' பட நடிகைக்கு 3வது திருமணம்!

ஹாலிவுட் நடிகையும் உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரும் 'அவெஞ்சர்ஸ்' சீரீஸ் படங்களில் நடித்தவருமான ஸ்கர்லெட் ஜொஹான்சன் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்யவுள்ளார்.

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு சின்மயி கொடுத்த பதிலடி!

வைரமுத்து மீது 'மீடூ' குற்றச்சாட்டு, டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றம் பின் மீண்டும் நீதிமன்ற தீர்ப்பில் கிடைத்த வெற்றி பரபரப்பான செய்தியில் இருந்து வருபவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி

பிரபாஸின் 'சாஹோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களால் உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் 'சாஹோ'