சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 22 பேர்…. 7 நாட்களுக்குப் பின் பலர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

  • IndiaGlitz, [Tuesday,January 19 2021]

சீனாவின் ஷாண்டோய் மாகாணத்தில் உள்ள யான்டாய் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தச் சுரங்கத்தில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆம் தேதியும் வழக்கம் போல வேலைக்குச் சென்று உள்ளனர். ஆனால் அந்தச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி சுரங்கத்திற்குள் 22 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுரங்கத்தின் நுழைவாயில் முழுவதும் மூடிக்கொண்டு விட்டதால் உள்ளே மாட்டிக் கொண்டு விட்ட தொழிலாளர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுரங்கத்திற்குள் இருக்கும் 22 தொழிலாளர்கள் நிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதையடுத்து பேரிடர் மீட்புக் குழுவினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மீட்புக் குழுவினருக்கு தோல்வியே ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்ட சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் உயிரோடு இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் உத்வேகத்துடன் செயல்பட்ட மீட்புக் குழுவினர் 7 ஆவது நாளாக இன்று 12 தொழிலாளர்களை உயிரோடு மீட்டு உள்ளனர். 12 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப் பட்டவுடன் மீதியிருக்கும் 10 தொழிலாளர்கள் நிலை என்ன என்பதைக் குறித்து மீட்புக் குழுவினர் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி கொண்டு தேர்தல் பிரசாரமும் செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்

மேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரி டைட்டில் வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே 

விழா மேடையில் இருந்த சரஸ்வதி படத்தால் இலக்கிய விருதையே உதறித் தள்ளிய கவிஞர்!

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருந்த மராட்டிய மூத்த கவிஞர் ஒருவர் விழா மேடையில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு இருந்ததால் விருதையே வேண்டாம் என உதறி இருக்கிறார்.

மொபைல் போனால் குழந்தைக்கு கண் பார்வையைத் தவிர இத்தனை சிக்கலா? விளக்கம் அளிக்கும் வீடியோ!

பொதுவா கண் பார்வை பாதிக்கப்படும்  என்ற நோக்கத்தில்தான் நாம் மொபைல் போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம் எனச் சொல்கிறோம்.

மத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா? இளையராஜா விளக்கம்!

கடந்த சில மாதங்களாக இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ இடையே பிரச்சனை நீண்டு வந்த நிலையில் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அநீதி இழைத்ததாகவும்