சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 22 பேர்…. 7 நாட்களுக்குப் பின் பலர் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவின் ஷாண்டோய் மாகாணத்தில் உள்ள யான்டாய் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தச் சுரங்கத்தில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆம் தேதியும் வழக்கம் போல வேலைக்குச் சென்று உள்ளனர். ஆனால் அந்தச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி சுரங்கத்திற்குள் 22 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சுரங்கத்தின் நுழைவாயில் முழுவதும் மூடிக்கொண்டு விட்டதால் உள்ளே மாட்டிக் கொண்டு விட்ட தொழிலாளர்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுரங்கத்திற்குள் இருக்கும் 22 தொழிலாளர்கள் நிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதையடுத்து பேரிடர் மீட்புக் குழுவினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மீட்புக் குழுவினருக்கு தோல்வியே ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்ட சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் உயிரோடு இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் உத்வேகத்துடன் செயல்பட்ட மீட்புக் குழுவினர் 7 ஆவது நாளாக இன்று 12 தொழிலாளர்களை உயிரோடு மீட்டு உள்ளனர். 12 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப் பட்டவுடன் மீதியிருக்கும் 10 தொழிலாளர்கள் நிலை என்ன என்பதைக் குறித்து மீட்புக் குழுவினர் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout