தமிழக ஆளுனரை சந்தித்தது ஏன்? தவெக தலைவர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Monday,December 30 2024]

தமிழக ஆளுநரை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தமிழக வெற்றி கழகம் விளக்கம் வெளியிட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழக முழுவதும் அண்மையில் பெய்த பருவ மழை மற்றும் பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எங்கள் கோரிக்கையை கேட்ட ஆளுநர் அவர்கள் அவற்றை பரிசீலிப்பதாக கூறினார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More News

ஆளுனர் ஆர்.என்.ரவியை திடீரென சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை.. விஜய் எழுதிய கடிதம்..!

நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகவே, இந்த கடிதத்தை எழுதுகிறேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்

மேள தாளத்துடன்  ஜெஃப்ரிக்கு கிடைத்த வரவேற்பு.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும், இன்னும் மூன்றே வாரம் இருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கு

ஒவ்வொரு ஆண்டும் அஜித்திற்காக காத்திருப்பேன்: ஆதிக் ரவிச்சந்திரனின் நெகிழ்ச்சி பதிவு..!

ஒவ்வொரு ஆண்டும் அஜித் அவர்களின் குரலை கேட்பதற்காக திரையரங்கில் காத்திருப்பேன் என்றும், அவருடைய படத்தை இயக்கியதன் மூலம் டப்பிங் போது

அட்லி, ஏஆர் முருகதாஸை அடுத்து பாலிவுட் செல்லும் வெங்கட் பிரபு.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..!

தமிழ் திரை உலகை சேர்ந்த இயக்குனர்கள் பாலிவுட்டில் படங்களை இயக்கி வரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.