தமிழக ஆளுனரை சந்தித்தது ஏன்? தவெக தலைவர் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக ஆளுநரை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தமிழக வெற்றி கழகம் விளக்கம் வெளியிட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழக முழுவதும் அண்மையில் பெய்த பருவ மழை மற்றும் பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எங்கள் கோரிக்கையை கேட்ட ஆளுநர் அவர்கள் அவற்றை பரிசீலிப்பதாக கூறினார்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com