இன்று மட்டுமல்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்: தவெக தலைவர் விஜய்யின் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அன்னையர் தின வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது முதல் பல்வேறு மறைந்த அரசியல் தலைவர்களுக்கும் தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் முன்னிலையில் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், ‘அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களையும் விஜய் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளை தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.