close
Choose your channels

 அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்.. தவெக தலைவர் விஜய்யின் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

Wednesday, December 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் மறைந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் குறித்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். அதேபோல் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என எந்த மத பண்டிகையாக இருந்தாலும் அந்த பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் இந்த உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம், நிலைத்து நீடிக்கட்டும் என்றும், அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

அதேபோல் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தில் தெரிவித்திருப்பதாவது: வருட இறுதியில் பனிக்குளிர் மாதத்தில் கொண்டாட்ட மனநிலையைக் கொண்டு வரும் கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடுகிற சகோதர சகோதரிகளுக்கு என் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment