ஆயுத பூஜைக்கு வாழ்த்து.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!

  • IndiaGlitz, [Friday,October 11 2024]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜைக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்று பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இன்று தனது சமூக வலைதளத்தில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துக்களை விஜய் கூறியுள்ளார் அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது:

தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும் பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.