ஆளுனர் ஆர்.என்.ரவியை திடீரென சந்திக்கும் தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Monday,December 30 2024]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை, பெண்களின் பாதுகாப்பு குறித்து தனது கைப்பட கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், “நம்மை யாரும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை. அதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்” என்று, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழக ஆளுநரை இன்று மதியம் ஒரு மணிக்கு சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த தகவலை, தமிழக ஆளுநரின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகர் திருஞான சம்பந்தம் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து, ஆளுநரிடம் விஜய் பேசுவார் என்றும், மேலும், இந்த வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்துவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.