அனுமதி கிடைத்துவிட்டது.. தடைகளை தகர்ப்போம்.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

  • IndiaGlitz, [Sunday,September 08 2024]

விஜயின் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதை அடுத்து விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம். தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி. கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களை சந்திப்போம்!

வாகை சூடுவோம்!

 

More News

ஹீரோவாகும் பாலகிருஷ்ணா மகன்.. முதல் படமே சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இனி கமல் படங்களில் ஏஐ டெக்னாலஜியை பார்க்கலாம்... அமெரிக்கா சென்று படிக்கும் உலக நாயகன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜி குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளதாகவும் அவர் 90 நாட்கள் அங்கு தங்கியிருந்து படிப்பார் என்றும் கூறப்படுகிறது.

'ஜெயிலர்' படத்தில் நடித்த முக்கிய நடிகர் கைது.. விமான நிலையத்தில் போதையில் தகராறு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர் விமான நிலையத்தில் போதையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் தவெக மாநாட்டிற்கு அனுமதி கிடைத்ததா? மாறுபட்ட செய்தியால் தொண்டர்கள் குழப்பம்..!

தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி விட்டதாக ஒரு செய்தியும், அனுமதி வழங்கப்படவில்லை என்று ஒரு செய்தியும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருப்பதை

பட்டையை கிளப்பும் 'மட்ட' பாடல்.. சமூக வலைத்தள டிரெண்டிங்கில் த்ரிஷா..!

விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற 'மட்ட' பாடல் மிகப்பெரிய ஹிட்