விரைவில் நாம் சந்திப்போம்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி சொன்ன விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆறுதலையும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறிவரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் நாம் சந்திப்போம் என்று ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவில் விஜய் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயபூர்வமாக வாழ்த்துகிறேன், விரைவில் நாம் சந்திப்போம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
— TVK Vijay (@tvkvijayhq) May 10, 2024
விரைவில் நாம் சந்திப்போம்! pic.twitter.com/OUYZYhl5Ni
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com