விரைவில் நாம் சந்திப்போம்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி சொன்ன விஜய்..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆறுதலையும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறிவரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் நாம் சந்திப்போம் என்று ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவில் விஜய் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வளம் வர இதயபூர்வமாக வாழ்த்துகிறேன், விரைவில் நாம் சந்திப்போம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பாருங்கள்.. சூர்யா பரிந்துரைத்த இன்று ரிலீசான படம்..!

இன்று ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள் என்று நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் 'VD14' பட அறிவிப்பு..! 1854-78 காலகட்டத்தின் நாயகன் கதை..!

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது

7 வருடங்களுக்கு பின் விஜய் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற டிவி நிறுவனம்.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தை கவனிக்கும் பணியும்

இன்று முதல் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு.. முதல் ஷெட்யூலில் மாஸ் செய்யும் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் நேற்று சென்னையில் இந்த படத்தின் பூஜை மிக எளிமையாக

பகத் ஃபாசிலின் 'ஆவேஷம்' உள்பட இன்று எத்தனை படங்கள்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது