தவெக தலைவர் விஜய்யின் குழந்தைகள் தின வாழ்த்து.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைதளத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தின பிறந்த தினமான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் பல திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் குழந்தைகள் தின வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை, விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!”
— TVK Vijay (@tvkvijayhq) November 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments