பெரியாருக்கு வாழ்த்து மட்டுமல்ல.. மரியாதையும் செய்த தவெக தலைவர் விஜய்.. திராவிட அரசியலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அதன் பின்னர் சில நிமிடங்களில் தந்தை பெரியாருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:
"சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து தமிழர்களை விழிப்புணர்வுக்கு தூண்டியவர் தந்தை பெரியார். அவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கருத்தின் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள அடிமைத்தனத்தை அழித்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடச் செய்தவர். சமூக சீர்திருத்தவாதியும், தென்னகத்தின் சாக்ரட்டீசும் ஆன பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, சமத்துவம், சம உரிமை போன்றவற்றைப் பாதுகாக்க நாங்கள் உறுதியேற்போம்"
இந்த நிலையில், பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நிற்காமல், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பெரியாரின் நினைவிடத்திற்கு நேரடியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதற்கான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், தற்போது பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை பார்க்கும்போது அவர் திராவிட அரசியலை முன்வைக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி உட்பட இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதும், அவர் திராவிட அரசியல் நோக்கி சென்று கொண்டிருப்பதை உறுதி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் திராவிட அரசியல் பாதை இல்லாமல் வேறு பாதையில் அரசியல் செய்ய முடியாது என்பதை விஜய் புரிந்து கொண்டதாகவும், அதனால் திராவிட அரசியல் பாதையை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய இந்த பாதை, அவருக்கும் அவரது கட்சிக்கும் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments