கேப்டன் விஜயகாந்த் மகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தவெக தலைவர் விஜய்.. என்ன நடந்தது?
- IndiaGlitz, [Saturday,December 14 2024]
கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அவ்வப்போது மறைந்த அரசியல் தலைவர்கள் மற்றும் வாழும் அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தேமுதிக கட்சியின் விஜய பிரபாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய போது, அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தேமுதிக தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ’கோட்’ திரைப்படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த் சில காட்சிகளில் தோன்றிய போது, அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு விஜய் சென்றிருந்தார் என்பதும், அப்போது விஜயகாந்தின் இரண்டு மகன்கள் இடமும், அவர் தனிப்பட்ட முறையில் பாசத்துடன் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜயகாந்த் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய், அவரது இரண்டு மகன்களின் பிறந்தநாளுக்கும் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் தொலைபேசி வாயிலாக புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். @tvkvijayhq @BussyAnand #HBDVijayaPrabhakaran #Vijay #TVKVijay pic.twitter.com/rcK6MyOVqn
— Captain News (@captainnewstv) December 13, 2024