close
Choose your channels

தொடங்கியது தவெக மாநாடு.. தூக்கி வீசப்பட்ட கொடிகள்.. மாலையாக கழுத்தில் போட்ட விஜய்..!

Sunday, October 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சற்று முன் தொடங்கிய நிலையில், மாநாட்டு மேடைக்கு விஜய் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பின்னர் அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில், சற்று முன் மாநாடு தொடங்கியது என்பதும், தமிழக வெற்றி கழகத்தின் பாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மேடைக்கு விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா வருகை தந்தனர், மேலும் கட்சியின் நிர்வாகிகளும் மேடையில் வருகை தந்தனர்.

இதனை அடுத்து, விஜய்க்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் விஜய் மேடைக்கு வரும்போது, அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தொண்டர்கள் உற்சாகத்தில் கொடியை தூக்கி வீசிய போது, அந்த கொடியை விஜய் எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்ட காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை, கட்சியின் தலைவர் விஜய் ஏற்றினார். மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கட்சி கொடியை அவர் காணொளி வழியாக ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து, மாநாட்டில் கட்சி கொள்கை உறுதிமொழி வாசிக்கப்பட்டது, தலைவர் விஜய் உள்பட விஜய் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment