தொடங்கியது தவெக மாநாடு.. தூக்கி வீசப்பட்ட கொடிகள்.. மாலையாக கழுத்தில் போட்ட விஜய்..!

  • IndiaGlitz, [Sunday,October 27 2024]

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சற்று முன் தொடங்கிய நிலையில், மாநாட்டு மேடைக்கு விஜய் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பின்னர் அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில், சற்று முன் மாநாடு தொடங்கியது என்பதும், தமிழக வெற்றி கழகத்தின் பாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மேடைக்கு விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா வருகை தந்தனர், மேலும் கட்சியின் நிர்வாகிகளும் மேடையில் வருகை தந்தனர்.

இதனை அடுத்து, விஜய்க்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் விஜய் மேடைக்கு வரும்போது, அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தொண்டர்கள் உற்சாகத்தில் கொடியை தூக்கி வீசிய போது, அந்த கொடியை விஜய் எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்ட காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை, கட்சியின் தலைவர் விஜய் ஏற்றினார். மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கட்சி கொடியை அவர் காணொளி வழியாக ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து, மாநாட்டில் கட்சி கொள்கை உறுதிமொழி வாசிக்கப்பட்டது, தலைவர் விஜய் உள்பட விஜய் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

More News

ஜானி மாஸ்டரை கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் விட்ட குடும்பத்தினர்.. நெகிழ்ச்சியான வீடியோ..!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடன இயக்குனர் ஜானி, ஒரு பெண் நடன இயக்குனரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். பின்னர்,

இளையராஜா கம்போஸ் செய்த பின்னணி இசையை மட்டும் கேட்க வேண்டுமா? அவரே செய்த ஏற்பாடு..!

இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த பாடல்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மனதை கவர்ந்ததோ அதே அளவுக்கு அவர் திரைப்படங்களுக்கு கம்போஸ் செய்த பின்னணியை செய்யும் கவர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

தவெக மாநில மாநாடு: விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து..!

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் காணொளி.. விஜய்க்கு வாழ்த்து..  'கங்குவா' இசை வெளியீட்டு துளிகள்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய காணொளி திரையிடப்பட்டது.

விஜய் அறிவுரையை மதிக்காத தொண்டர்கள்.. விபத்தில் ஒருவர் பரிதாப பலி..!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில்