பெப்சியை அடுத்து உதவிக்கரம் கேட்கும் சின்னத்திரை ஊழியர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் உள்பட திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சின்னத்திரை கலைஞர்களும் தங்களுக்கும் உதவி தேவை என உதவிக்கரம் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உதவிகரம் நீட்டும் உன்னத உள்ளங்களுக்கு வணக்கம். உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த கொரானா தாக்குதலால், சின்னத்திரை உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தாங்கள் அறிவிர்கள். வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்த தொழிலையே நம்பிவாழும் சின்னத்திரை கூட்டமைப்பை சேர்ந்த உதவி இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, அன்றாட தேவைகளை கூடபூர்த்திசெய்ய முடியாமல் வேதனைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கழ்நிலையில் பெரியதிரையை சேர்ந்த பல தயாரிப்பாளர்களும், நடிகர்களும் பெப்சி மூலமாக பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டிருப்பது ஆறுதலாக இருக்கிறது. அதேபோல், சின்னத்திரையை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேதனைகளை குறைக்க எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பண உதவியோ, பொருளுதவியோ செய்தால் அது அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பேருதவியாக இருக்கும்.
இந்த உதவிகளை நாங்கள் என்றென்றும் மறக்கமாட்டோம். மாறாக உங்கள் உதவியை உலகத்திற்கு பறைசாற்றுவோம் என்று தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments