யூடியூபில் வருமானத்தை அள்ளும் டிவி நட்சத்திரங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
யூடியூப் என்பது பொழுதுபோக்கு வீடியோ பார்க்கும் தளம் என்பதையும் தாண்டி தற்போது அது வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் தளமாக மாறி விட்டது. பலர் யூ டியூப்பில் சேனல் தொடங்கி தங்களுக்கு தெரிந்ததை வீடியோவாக வெளியிட்டு வருமானத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தனக்கு யூடியூபில் மாதம் 4 லட்ச ரூபாய் வருமானம் வருவதாக தெரிவித்து இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் பல்கலைக்கழகத்திற்கு ஆன பாடங்களை எடுத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரியை விட நம்ம ஊர் டிவி நட்சத்திரங்கள் அதிகம் யூடியூப் சேனல் மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். குறிப்பாக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா மாதம் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை தனது யூடியூப் சேனல் மூலம் வருமானம் பெறுகிறார் என கூறப்படுகிறது. அவரது யூடியூப் சேனலில் சப்பாத்தி செய்வது எப்படி? சாப்பிடுவது எப்படி? சட்னி அரைப்பது எப்படி? என்பதை விலாவாரியாக காண்பிக்கிறார். அவருக்கு எதையெடுத்தாலும் கண்டண்ட் தான் என்பது குறிப்பிடதக்கது. சமீபத்தில் கூட அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மற்றொரு தொகுப்பாளினியான மணிமேகலையும் தனது கணவருடன் சேர்ந்து வித்தியாசமான இடங்களுக்கு சென்று வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இதேபோல் யூடியூபில் சின்ன திரையுலகினர் பலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com