21 வயது தொலைக்காட்சி நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

நடிகைகள், குறிப்பாக தொலைக்காட்சி நடிகைகளின் தற்கொலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த தற்கொலைகளுக்கு மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வியே பெரும்பாலும் காரணமாக உள்ளது

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை நாகா ஜான்சி இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இது தெலுங்கு சீரியல் நடிகர், நடிகைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகா ஜான்சி, விஜயவாடாவை சேர்ந்த சூர்யா என்பவரை காதலித்து வந்ததாகவும் தற்கொலைக்கு முன் அவரிடம் நீண்ட நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜான்சி-சூர்யா காதலை இருவீட்டார்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதனால் கடந்த சில நாட்களாக ஜான்சி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

ஜான்சியின் தற்கொலை குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.