சின்னத்திரை நடிகர், பேச்சாளர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகிற்கு மேலும் இழப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
2024 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து திரை உலகில் உள்ள சிலர் அடுத்தடுத்து காலம் ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் லொள்ளு சபா சேஷு மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகர், பேச்சாளர், நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சி பள்ளி நடத்தி வருமான அருள்மணி திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘அழகி’ ’தென்றல்’ போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட அருள்மணி, தொடர்ந்து பல டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டும் இன்றி அரசியல் மேடைப் பேச்சாளர் என்பதும், அதிமுகவுக்காக இவர் பல மேடைகளில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சி பள்ளியையும் நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் திருச்சியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அருள்மணி, சென்னை திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருத நிலையில் திடீரென நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் அவருடைய மறைவு திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் குறிப்பாக சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அருள்மணி மறைவை அடுத்து அவருடைய உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments