சின்னத்திரை நடிகர், பேச்சாளர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகிற்கு மேலும் இழப்பு..

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

2024 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து திரை உலகில் உள்ள சிலர் அடுத்தடுத்து காலம் ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் லொள்ளு சபா சேஷு மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர், பேச்சாளர், நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சி பள்ளி நடத்தி வருமான அருள்மணி திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘அழகி’ ’தென்றல்’ போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்ட அருள்மணி, தொடர்ந்து பல டிவி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டும் இன்றி அரசியல் மேடைப் பேச்சாளர் என்பதும், அதிமுகவுக்காக இவர் பல மேடைகளில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சி பள்ளியையும் நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் திருச்சியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அருள்மணி, சென்னை திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டிருத நிலையில் திடீரென நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் அவருடைய மறைவு திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் குறிப்பாக சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அருள்மணி மறைவை அடுத்து அவருடைய உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More News

தங்கைக்காக வருத்தப்படாத நாளே இல்லை சீமானின் தாயார் பகிர்ந்த உண்மைகள்.

பேச்சில் அதிக ஆர்வம் கொண்டவன்.அவன் இந்த மாதிரியான சமூக அக்கறையோடு மேடையில் ஏறி பேசுவதை கல்லூரி காலத்திலேயே ஆரம்பித்து விட்டான்...

'துப்பறிவாளன் 2'.. இணை இயக்குனர், துணை இயக்குனர் வேலையை தானே செய்யும் விஷால்..!

விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில்  'துப்பறிவாளன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'துப்பறிவாளன் 2' படத்தை விஷால் இயக்க  உள்ளார் என்பதும்

ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது 'அண்டாவ காணோம்'.. தயாரிப்பாளரின் அப்டேட்..!

விஷால் நடித்த 'திமிரு' பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்' தங்கர் பச்சான் இயக்கிய 'பள்ளிக்கூடம்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த திரைப்படம் 'அண்டாவ காணோம்'.

லிவ் இன் உறவில் வாழ்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்: இளைஞர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்..!

முதலில் லிவ் இன் முறையில் வாழ்ந்து விட்டு அதன் பிறகு ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என பிரபல பாலிவுட் நடிகை இளைஞர்களுக்கு அட்வைஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நொடியில நாம் எடுக்குற முடிவு தான் நாம மனுஷனா, மனித மிருகமான்னு தெரியும்: 'ஒரு நொடி' டீசர்..

ஒரு நொடி' என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் 'ஆகி வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக தெரிகிறது.