ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாகும் தொலைக்காட்சி புகழ் டிடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படமான 'Frozen 2' திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்தப் படம் இந்தியாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான தமிழ் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரான எல்சா என்ற கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் பின்னணி குரல் கொடுத்திருந்தார் என்பது செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தில் எல்சாவின் தங்கை கேரக்டரான அன்னா என்ற கேரக்டருக்கு தொலைக்காட்சிக புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷினி குரல் கொடுத்துள்ளார்.
அன்னா கேரக்டருக்கு குரல் கொடுத்தது போன்ற அனுபவம் குறித்து திவ்யதர்ஷினி கூறியதாவது: டிஸ்னியில் இருந்து இப்படத்தில் வேலை செய்யக் கேட்ட போதே நான் உற்சாகத்தில் மிதந்தேன். எப்படியானதொரு வாய்ப்பு. சிறு வயது முதல் டிஸ்னியின் படங்கள் எனது ஃபேவரைட். அதிலும் ராஜகுமாரி கதைகள் என்னை முன்வைத்ததாக உணர்வேன். எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள் ஆனால் இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள் அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது. இப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தது மேலும் மகிழ்வை தந்தது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments