140 பேரில் டிவி பிரமுகரும் ஒருவரா? 25 வயது இளம்பெண் கொடுத்த பாலியல் புகாரால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது பெண் தன்னை 140பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமீபத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 140 பேர்களில் அரசியல்வாதிகளின் உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், மீடியா பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் இருப்பதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட 140 பேர்களில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் என செய்திகள் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ப்ரதீப் மச்சிராஜா என்பவர் தான் அந்த 140ல் ஒருவர் என்ற தகவல் ஒருசில ஊடகங்களிலும் யூடியூப் சேனலிலும் பரவி வருவதால் ப்ரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து ப்ரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இதனால் நானும் எனது குடும்பத்தார்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் சமூக வலைத்தளம் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி. அதை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும். எங்களுக்கு ஏதாவது ஆனால் யார் பொறுப்பேற்பது. ஆதாரமில்லாமல் என் மீது குற்றஞ்சாட்டும் ஒருவரையும் சும்மா விடமாட்டேன்’ என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com