கணவர் இறந்த செய்தியை கண்ணீருடன் டிவியில் வாசித்த செய்தியாளர்

  • IndiaGlitz, [Sunday,April 09 2017]

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் ஒரு பெண், தனது கணவர் இறந்த செய்தியையே பிரேக்கிங் செய்தியாக வாசித்த உருக்கமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் டிவி ஒன்றில் செய்தி வாசிக்கும் சுப்ரீத் கவுர் என்ற 28 வயது பெண், சமீபத்தில் வழக்கம்போல செய்தி வாசித்து கொண்டிருந்தார். அப்போது வாகன விபத்து நடந்ததாகவும், அதில் ஐந்து பேர் பலியானதாகவும் செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியை வாசிக்கும்படி செய்தியாசிரியர் சுப்ரீத் கவுருக்கு செய்கை மூலம் பணித்தார்.

அந்த செய்தியை பார்த்ததும் அது தனது கணவர் சென்ற கார் என்றும் இறந்த ஐந்து பேர்களில் தனது கணவரும் ஒருவர் என்பதையும் சுப்ரீத் கவுர் புரிந்து கொண்டார்.உடனே கண்ணீர் அவர் கண்களை எட்டிப்பார்த்தது. இருப்பினும் மனதில் சோகத்தை அடக்கி கொண்டு அந்த செய்தியை வாசித்தார். பின்னர் செய்தி வாசித்து முடித்தவுடன் உறவினர்கள் மூலம் இறந்தது தனது கணவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டு கதறி அழுதார். சக ஊழியர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறியபோது, 'விபத்துக்குள்ளானது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார். அந்த செய்தியை வாசித்துவிட்டு வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. கவுர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

More News

அட்லியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவரும், தற்போது 'தளபதி 61' படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் அட்லி தயாரித்து வரும் 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

மகளுக்கு புத்தாடை வாங்க 2 ஆண்டுகள் பிச்சை எடுத்த தந்தை.

ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு சிறிதும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்பதை நிரூபிக்கும் வகையில் பிச்சைக்காரர் ஒருவர் தனது மகளுக்கு புத்தாடை அணிந்து அழகு பார்க்க இரண்டு ஆண்டுகள் பிச்சை எடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் ராஜாவையும் தடுப்பார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்ததும், பின்னர் ஒருசில அரசியல்வாதிகளின் எதிர்ப்பு காரணமாக ரஜினிகாந்த் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதும் தெரிந்ததே...

ஐடி சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம். 85% வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பட்டுவாடா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீராய் இரைத்து கொண்டிருக்கும் தகவல்கள் காரணமாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் ஒரு முக்கிய ஆவணம் சிக்கியிருப்பதாகவும், அதில் ஆர்.கே.நகரில் உள்

கால் நூற்றாண்டு இசை சரித்திரம்

இந்த 2017 தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மணிரத்னத்தின் இருபத்தைந்தாவது திரைப்படமான 'காற்று வெளியிடை' வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டுடன் AR ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் கழிகின்றன. மணிரத்னமும் ரஹ்மானும் இணைந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து க