சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகினர்!

  • IndiaGlitz, [Monday,May 22 2023]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான பெங்காலி நடிகை ஒருவர் ஷுட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்காலி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா. 29 வயதான இவர் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பராநகர் கோஷ்பாரா குறுக்குச் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது இவர் சென்ற இருசக்கர டாக்ஸி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதால் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதாகவும் இதனால் நிலை தடுமாறி சுசிந்திரா தாஸ்குப்தா கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த லாரி ஒன்று திடீரென நடிகை சுசிந்திரா தாஸ்குப்தா மீது மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவருடைய கணவர் தேப் ஜோதி சென்குப்தா நேற்று ஷுட்டிங் முடிந்து வீடு திரும்பியபோது இந்தச் சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இளம் நடிகை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மேற்குவங்க சினிமா துறையினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

சித்தார்த் உடன் காதலா? க்யூட் ரியாக்‌ஷன் கொடுத்த அதிதிராவ் ஹைத்ரி ..!

 நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் காதலித்வ்வி ஹைத்ரி ரியாக்சன் கொடுத்தது க்யூட் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பெட்ரூமில் காதல் ஜோடிக்கு நடுவில் படுத்து கொண்ட மர்ம நபர்.. நடிகையின் வில்லாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நடிகைக்கு சொந்தமான வில்லாவில் காதல் ஜோடி தங்கி இருந்த நிலையில் நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடுவில் மர்ம நபர் ஒருவர் படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுவன் இசையில் விஜய் பாடிய ஒரே பாடல்.. 'தளபதி 68' படத்தில் பாடுவாரா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68 படத்தின்' அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் தமன்னா.. 10 கிலோ எடை குறைந்ததா? வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து 10 கிலோ எடையை குறைக்க இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழு வாழ விடு.. அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு: 

 நடிகர் அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ள அறிக்கை சற்றுமுன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அறிக்கைகள் அஜித்குமார் கூறியிருப்பதாவது: