அஜித், விஜய் குறித்து டிவி நடிகை கூறிய மாஸ் பதில்
- IndiaGlitz, [Thursday,April 05 2018]
சின்னத்திரை, பெரிய திரை என எந்த நட்சத்திரமாக இருந்தாலும் மீடியாக்களுக்கு பேட்டியளிக்கும்போது கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் குறித்து பேசாமல் அந்த பேட்டி முழுமை அடையாது. இவர்கள் இருவரை பற்றி வெளிவரும் எந்த விஷயமாக இருந்தாலும் அது சமூக வலைத்தளங்களில் அடுத்த நிமிடமே டிரெண்டாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சின்னத்திரையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற தொடரில் நடித்து வரும் நடிகை சரண்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித், விஜய் இருவரை பற்றியும் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
அஜீத் குறித்து அவர் கூறியபோது, ‘தல’ அஜீத் பற்றி நாம் என்ன சொல்வது, தமிழ்நாடே அவரை பற்றி சொல்கிறது என்றும் விஜய் குறித்து கூறியபோது, ‘தளபதி’ விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தைப் பார்த்து நான் மெர்சலாகிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.