போதைப்பொருள் விவகாரம்: பிரபல டிவி நடிகை கைது!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தீபிகா படுகோனே உள்பட 4 நடிகைகளிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி நடிகை பிரீத்திகா சவுகான் என்பவர் போதை பொருள் பயன்படுத்தியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு பின் நீதிமன்றத்தில் ப்ரீத்திகா சவுகான் ஆஜர்செய்யப்பட்டபோது அவரை நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே சில நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தொலைக்காட்சி நடிகை கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments