அடிதடி ரகளை மூக்கில் ரத்தம்: நிச்சயதார்த்தம் ஆன நடிகர்-நடிகையின் பரிதாப நிலை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நிச்சயதார்த்தம் முடிந்த நட்சத்திர ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் அடித்து ரகளை செய்ததால் காயம் ஏற்பட்டு தற்போது போலீஸ் கேஸ் ஆகியுள்ளது
தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சாகர் மற்றும் நடிகை சுபுஹி ஜோஷி இருவரும் சமீபகாலமாக காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மததுடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த நிலையில் நிச்சயதார்த்ததிற்கு பின்னர் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.
சல்மான்கான் நடத்தவுள்ள இந்தி பிக்பாஸ் 13' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவருக்கும் அழைப்பு வந்தது இதற்கு சுபஹி ஒப்புக்கொண்டார். ஆனால் சித்தார்த் மறுத்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள, சித்தார்த் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது., சுபஹியும் காயம் அடைந்ததாக தெரிகிறது,
இதுகுறித்து சுபஹி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சித்தார்த்தை கைது செய்தனர், ஆனால் சித்தார்த், சுபஹி மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை. இதுகுறித்து சித்தார்த் கூறியபோது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் மறுத்ததால் என் மீது சுபஹி கோபம் கொண்டார். அவர் தான் என்னை முதலில் தாக்கினார். எனக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அப்போது நான் அவரை தள்ளிவிட்டேன்,. நான் அவர் மீது புகார் செய்திருந்தால் அவரையும் போலீசார் கைது செய்திருப்பார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. இனியும் அவரோடு வாழ்வது முடியாது என்பதால் நிச்சயதார்த்ததை ரத்து செய்துவிட்டேன். இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிடுவது என்றும் முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments