தூத்துகுடியில் போலீஸ் வாகனம் எரிப்பு: மீண்டும் பதட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தால் 11 பேர் பலியான நிலையில் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. இன்று காலை மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பதட்டநிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துகுடியில் பாதுகாப்பிற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேற்றைய போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை நடந்து வரும் மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments