தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலியானதால் பதட்டம்
- IndiaGlitz, [Tuesday,May 22 2018]
தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் இந்த போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது
இதனையடுத்து இன்று தூத்துகுடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து தூத்துகுடியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது
இந்த நிலையில் 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாலும், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாலும், தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் அதிகரித்து போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது.