சொந்த வீட்டில் நகை திருடிய மனைவி: அவமானத்தில் கணவர் தற்கொலை

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் வின்சென்ட் என்பவரின் மனைவி ஜான்சிராணி சொந்த வீட்டிலேயே 120 பவுன் நகைகளை திருடியதாவும் அதன்பின் போலீஸ் விசாரணையில் அவர் மாட்டிகொண்டு கைது செய்யப்பட்டதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் அதிக செலவுகள் செய்ய பேராசைப்பட்டு சொந்த வீட்டிலேயே தனது மனைவி திருடியதாலும் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதாலும் அவரது கணவர் வின்சென்ட் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வின்சென்ட் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டடுள்ளார். தனது மனைவியே சொந்த வீட்டில் நகை திருடி, போலீசில் மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளானதால் வின்செண்ட் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது